Tuesday, December 16, 2008

கவிதை சொல்லிய கதை !!!


ஆம் என் காதலும் கண்களில் தான் ஆரம்பமானது ...
ஜன்னல் ஓர பயணம் , அதில் சில்லென்ற தென்றலாய் அவள் முகம்
நாணமென்னும் நூல் தொடுத்து ஏய்தாள் கள்ள பார்வை
மீண்டும் அதே ஜன்னலோரம் , காத்திருந்தேன் அழுக்கு சட்டைக்கு பதில் அழகான சட்டையுடன்
அதே பார்வை , பரிட்சையத்தின் பரிசாய் சிறு புன்னகையும் சேர்ந்தது
பார்வை மின்சாரம் என்றால் , அரை புன்னகையோ ஆள் கொள்ளும் பூகம்பம்
பார்வையும் புண்ணகையும் சில நாள் தொடர ,hello என்றேன் ஒரு நாள்
பதிலாய் வெட்கம் தின்ற அரை வார்த்தை , ஆராய்ந்து பார்த்தால் hai என்றாள்
அரை வார்த்தையும் ஆயிரம் வார்த்தை ஆனது தேநீர் சந்திப்பில்
தற்செயலாய் சில நேரமும் , தன் செயளாய் பல நேரமும் மெல்ல உறசினோம்

நாணமாய் சிவக்கும் உன் முகமும் ஆயிரம் கதை கூறும்
விரல் பற்றியே நடக்கலானோம் , கை பற்றியே கடற்கரையும் அளந்தோம்
சின்ன சின்ன சில்மிசமும் ,ஒரு நொடி முத்தமும் என் உயிர் எங்கும் கலந்தது
இதுவே சுவர்கம் என்று நினைத்தேன்
ஆம் என் காதலும் திருமணத்தில் தான் முடிந்தது ...

மீண்டும் ஜன்னல் வழியே என் பார்வை ,மணவறையில் நீ யாருடனோ
தந்தை பாசம் என்றாய் , தாய் சொல் என்றாய் , சூழ்நிலை கைதி என்றாய்
உன்னை கைதி என்று சொல்லி என்னை தனிமை சிறையில் தள்ளி விட்டாய்
கடற்கரையில் உன் காலடி தேடும் பைத்தியக்காரனும் ஆனேன்
உறக்கம் இல்லா இரவுகளும் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
ஆண்டுகள் சில உருண்டன , அகவையும் அதிகரித்து
பிள்ளை பாசம் , பேரன் ஆசை , நலம் கருதிய நண்பர்கள் நச்சரிப்பு
கலியாண ஏற்பாடும் தீவிரமானது ,மணம் முடிப்பதற்கு முன்
கடைசியாய் ஒரு முறை அவளை சந்திப்பது என்னும் விபரதீமான முடிவு
அரை மனதாய் அழுத்தினேன் அழைப்பு மணியை
அதே முகம் , சில்மிச பார்வையும் இன்று வினா பார்வை ஆனது
சின்ன சிரிப்பும் அவள் முகத்தில் மெல்ல உலர்ந்து தான் போனது

என் இருதயமும் வேகமாய் உறைந்து தான் போனது
பரிட்சையத்தின் அடையாளமும் இல்லாமல் வரவேற்றாள் மரியாதை நிமித்தமாக
மறந்து தான் போனாள் போல் , நிலை குலைந்து தான் போனேன் நானும் ,
ஏதேதோ சொல்ல துடித்தவள் மௌனமாய் நின்றாள்
நிற்க பிடிக்காமல் புறப்பட எத்தனிதேன்
மெள்ள பேசியது , நான் பரிசாய் தந்த அவள் கால் கொழுசு
மௌனத்தின் இடையே அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர்
என் இதயமும் மெள்ள விக்கித்து தான் போனது

நெஞ்சினில் காதலையும் , கண்ணில் கணவுகளையும் புதைத்து வாழும் ஆயிர கணக்கான இந்திய பெண்களில் முகவரியும் ஆனாய் , முதல் வரியும் ஆனாய் .
நானும் அந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையாக விரும்பவில்லை
மனதில் உன்னை காதலித்து , மற்றொரு வாழ்கையும் விரும்பவில்லை
நீ இல்லாத காதலையும் கனவுகளாய் மாற்றி காதலித்தேன்
அர்த்தம் அறியா சந்தோஷம் , ஆயினும் சிறு கண்ணீரும் வந்தது
ஆம் என் காதலும் கண்ணீரில் தான் முடிந்தது ...

Friday, December 12, 2008


தென்றளுக்கு உன்னிடம் ஏனடி விளையாட்டு -
மலர் கொய்து விளையாடி அலுத்து மங்கை உன்னிடம் மன்றாடி பார்கிறதோ
மண்ணித்து அனுப்பு இம்முறை
தென்றலுக்கும் இடம் இல்லை இனி , நான் தீண்டும் தேகத்தில்

குறும்பும் செய்வாள் குழந்தை என
தாலாட்டி தலையும் கோதுவாள் , தாய் என
சண்டை இட்டு சமாதானம் செய்வாள் சகோதிரி என
முத்தம் இட்டு இட்சை மூட்டுவாள் , காதலி என
யார் என கேட்டேன்
பொய்யும் சொன்னாள் தோழி என்று

காதல் வீணர்கள் செயல் என்றே நினைத்து இருந்தேன்
அவள் பார்வை தந்த பூகம்பம் நேரும் வரை
காதல் காட்டு வெள்ளம் என்றே கணித்து இருந்தேன்
காலை பணி என்று உணர்ந்தேன் , அவள் முகம் கண்ட பின்
காதல் வெறும் சொல் என்று நினைத்து இருந்தேன்
அவள் மொழி தந்த மயக்கம் காணும் வரை
காதல் பைத்தியகாரர்கள் செயல் என்றே கருதினேன்
நானும் பைத்தியம் ஆனேன் , அவள் ஸ்பரிசம் உணர்ந்த பின்



தேர்வில் தோழ்வி - காரணம் கூறினேன்
மதி பெண்ணென மதி எங்கும் நீ நிறைந்து இருக்க
மதிபென்னின் மதிப்பும் என்னடி இனி
செல்லமாய் முறைக்கிறாள் சிரித்தபடி

Friday, November 28, 2008

பள்ளியில் பூத்த தாமரை



பள்ளி தாமரையே, பளிங்கு தேவதையே
பட்டாம்பூச்சி என சிறகடித்து பள்ளி பருவமதில்
குட்டி கணவுகளை தந்தாய்
உன் சின்ன சிரிப்பில் சிறகுகள் தந்து சிலிர்ப்பூட்டினாய்
மெல்ல பேசியே சிறு மயக்கம் தந்தாய்
உன் அகன்ற விழியினில் ஆயிரம் கதைகளும் சொன்னாய்
இரட்டை சடை கொண்டு ஒற்றை இதயமும் பறித்தாய்
குட்டி தீவே,குட்டை பாவடையில் நீயும் வலம் வர
எனக்குள் சின்ன சின்ன சிகரங்கள்
மலர்கள் வேண்டுமெனில் மொட்டுகளில் அழகாக இருக்கலாம்
பருவமென்னும் இதழ் விரித்தாலும் உன் பட்டு கன்னத்தின் அழகு மட்டும் குறைவதில்லை
இளம்பிறை என இளவயதில் கழித்தோம் முழு மதியென மலர்ந்த பின் மட்டும் நாணம் ஏனோ முகம் காட்ட மறுப்பதும் ஏனோ
தோழியே, வெகுளியாய் வினாக்கள் கேட்காதே,
சொல்லி விளங்குவது இல்லை உணர்வுகளும், நினைவுகளும்
நீ விட்டு சென்றாலும் உன் நினைவுகள் மட்டும் என்னை விட்டு விலகுவதுமில்லை
மழை நின்ற பின்னால் மரம் சிந்தும் ஒரு துளியும் அழகு தான், அது போல்
உன் நினைவுகள் என்னுள் அழகாய் ....

என் நண்பர்களுக்காக !



அறை எண் 215, இதில் கடவுள் இல்லை , அதற்கும் மேலான நண்பர்கள்
ஆம் , காகித குப்பைக்கு மத்தியில் நட்பு குவியலாய் நாங்கள்
எங்கள் நட்பின் நெருக்கத்தில் காற்று கூட எங்களிடம் மூச்சு திணறியது உண்டு
விடுதி என்னும் விசித்திர உலகம் அதில் விவரிக்க முடியாத இன்பங்கள்
பிறந்த நாள் கூப்பாடுகளும் , கூச்சல்களும்
மொக்கை படமென்றாலும் முதல் வகுப்பில் நாங்கள்
ஆனால் machine drawing என்றால் proxy ஐ நம்பி நாங்கள்
TV hall கிரிக்கெட் , அதில் உடைந்த கண்ணாடிகளும்
இரவு நேர காட்சிகளும் , அதற்கு பின் நீண்ட நேர நடை பயணமும்

கால் வலித்தது இல்லை , நண்பர்களின் நட்பில் நடப்பதால்
உப்பு இல்லாத விடுதி உணவு என்றாலும் ,வரிசையில் இடையே
சுவை இல்லாத உணவும் ஏனோ சுவைத்தது அன்று , நண்பர்களுக்கு மத்தியில்
பாபா ,ஆச்சி , படையப்பா mess என படை எடுத்தோம்
Half boil u kum, omlette kum அடி தடி
ஆனால் அதற்கு இணை இன்று நட்சத்திர hotel உணவிலும் கிடைப்பதில்லை
தாய் தந்தை வைத்த பெயர் பெயருக்காக மட்டும்
நண்பர்கள் நட்பாய் வைத்த பெயரே நிலைக்க
tech bath um, குளியலறை கூத்துகளும்
இருட்டு அறையில் பார்த்த matter படமும் , அதற்கு கொடுத்த டப்பிங்களும்
club கொண்டாடங்களும் அதற்கான சண்டைகளும்
புத்தகத்தை தூக்கியதில்லை , ஆனால் சீட்டு கட்டுகள் மட்டும் கையில்
project ku போவது இல்லை , business game மட்டும் விடிய விடிய
வகுப்புக்கு முதலில் செல்வதில் போட்டி , ஆர்வத்தில் அல்ல
உடைந்த கண்ணாடி ஜன்னலுக்கு அருகில் இடம் பிடிப்பதற்கு
பரிட்சைக்கு கண் விழித்ததும் இல்லை
ஆனால் intrams இரவுகளும் renaissance ராத்திரிகளும்
கண் உறங்கியதும் இல்லை
hand tennis, leg ball என வினோத விளையாட்டுகளும்
nmb ek tea um, egg puffs um
பரீட்சை நேர snack bar um,
sixers trophy fives game என வெற்றி கொடிப்பறக்கும் எங்கள் கோட்டையில்

hostel day கொண்டாடங்களும், அதில் ஆர்பரித்த ஆட்டமும்
Bangalore பயணம் ,அதில் cadburey கனவுகள் Khan brothers,
aarey oh , he man,surya tv என்று எத்தனை அழுத்தமான நினைவுகள்
இனி லட்சங்கள் ஈன்றாளும் , மனம் லயிப்பது அந்த நான்கு சுவர் வாழ்கையை தான்
கல்லூரி சாலையில் , நண்பர்கள் தோல் மீது கை இட்டு நடக்கும் ஒரு பயணம் இனியும் கிட்டுமா
சாம்பல் ஆனாலும் என் ஒவ்வொவொரு செதில்கலளிலும் கலந்து தான் இருக்கும் என் கல்லூரி நினைவுகள்
 
Dedicated to baby,baji,Maama,manis madan,roomie,soopy,Peeli,palla, loduku

Wednesday, November 26, 2008

நம்மை என்ன சொல்ல !


எட்டும் பொருளையும் எட்டா இடத்தில் இருந்தே எடுக்க எத்தநித்தேன்
எட்டும் சாக்கில் உண்னை எட்டி பிடித்திடும் ஆசையில் தான்
அதை தெரிந்தும் வளைந்து கொடுக்கும் உன்னையும் என்ன சொல்ல .
சரியா உடையை சரிய செய்து , சரிந்த உடையை சரி செய்வது போல்
என் மனதையும் சரிய செய்யும் உன்னையும் என்ன சொல்ல
அறிந்தும் அதை ரசிக்கும் என்னையும் என்ன சொல்ல .
கண்ணத்தில் மை என்று கதை சொல்லி அதை துடைப்பதை போல,
உண் கண்ணத்தை வருட துடிக்கும் என்னையும் என்ன சொல்ல
புரிந்தும் மெல்ல சிரிக்கும் உன்னையும் என்ன சொல்ல.
பட்டு பூச்சியை கண்டு பொய்யாய் பயந்து , கரமோடு கரம் கோர்த்து
தோல் மீது முகம் புதைத்து நடிக்கும் உன்னையும் என்ன சொல்ல
ஏனோ அதையே எதிர்பார்க்கும் என்னையும் என்ன சொல்ல

Tuesday, September 30, 2008


கலைந்தும் கலையாத காலை பொழுது
இருளும் ஒளியும் சண்டையிட
துயிலும் கலைந்தது மெல்ல
கரம் பிடித்த காதல் மணைவி
கை படும் தூரத்தில்
இனி போர்வையும் சுகம் இல்லையடி குளிருக்கு
கரம் பற்றி கட்டி அணைத்திட முயன்றேன்
மெல்ல சிணுங்கினாள் செல்லமாய் உதறினாள்
மனம் வாடும் முன் மருந்தென முத்தமும் தந்தாள்
உன் முத்தத்தின் ஈரத்திலும்
என் அரவணைப்பின் கதகதப்பிலும் ஆண்டுகள் நூறு வாழ்ந்து தான் பார்ப்போம் நம் காதலின் சத்தியத்தில் கரைந்து தான் பார்ப்போம்

Thursday, July 31, 2008

முதல் காதல்


காதல் இல்லாமல் கவிதையும் இல்லை!
பாவை இல்லாமல் பாட்டும் இல்லை!
இல்லை என்பவரிடம் வாதம் செய்ய விரும்பவில்லை -
ஏனெனில் என் கிறுக்கலுக்குப் பின்னால் காதலும் உண்டு!
பாட்டுக்குப் பின்னால் பாவையும் உண்டு!
ஆராய்ச்சி வேண்டாம் - என் முதல் காதல்
அகத்திய முனியின் அருமை மகள் மீது மட்டும்!

உன் மனதோடு மட்டுமே !!!


கடலோடு கரைந்தாலும் மழைத் துளியாய் உன் மடி மீது!
வெயிலோடு வீழ்ந்தாலும் விடியலாய் உன் வாசலில்!
மண்ணோடு மரித்தாலும் மண்வாசனையாய் உன் மனதோடு மட்டுமே !!!

நினைவுகள்


உன் நினைவுகள் நீரில் படர்ந்த பாசி போல
எத்தனை முறை விலக்கிவிட்டாலும் வந்து ஒட்டிக் கொள்கின்றன!

கவிதைத் தாள்


நான் கவிதை தாங்கும் புத்தகமா என்ன-
உன் விழி பட்ட பக்கம் எல்லாம் என் கவிதை பக்கங்கள்!

காதல் தோல்வி


தோல்விகளில் மட்டுமே வெற்றி
காதலும் என்னைக் காதலிக்கவில்லை போல்!

முதல் மயக்கம்


ஆயிரம் முறை உன் முகம் கண்டு மகிழ்ந்து இருந்தாலும்
உன் முதல் பார்வை தந்த மயக்கம் மட்டும் மறு பிறவி வரை மனதோடு!

காதல் கல்லறை


பழி ஏனடி விதியின் மீது
உன் விழி செய்த சதி அன்றோ?!
கல்லுக்கும் கடலுக்கும் கூட என் காதல் புரிய ,
உனக்கு ஏனடி என் காதல் புரியவில்லை
இன்று கல்லறையில் வைத்த பூவை அன்றே என்னிடம் கொடுத்திருந்தால்
நான் மட்டும் இல்லை என் காதலும் உயிரோடு!

காமமும் காதலும்


காமம் இல்லாத காதல், அது கற்பனை கலந்திடாத கவிதை
கற்பனை கலக்கும் போது தான் கவிதையும் அழகு
ஆம் பெண்ணே ,
உன் இதழும் என் இதழும் சேர்த்தே இனி வார்த்தைகள் பேசுவோம்
காது மடல் ஓர மூச்சில் தணல் மூட்டுவோம்
வியர்வை கொண்டே குளிரும் காயுவோம்
உன் சேலைக்குள் நானும் , என் சட்டைக்குள் நீயும் உடை மாற்றுவோம்
காயம் செய்து குதூகலிப்போம்!
விரல் கொண்டு மேனியில் ஓவியம் தீட்டுவோம்
குளிப்பித்து அழுக்காகும் கலை கற்போம்
வாத்சயனற்கும் வித்தை கற்பிப்போம்
வெட்கத்தையும் வெட்கப்பட செய்வோம் இனி
இனி கலைந்த சேலையும் காய்ந்த பூக்களும் நடந்தேறிய கதை காலையில் சொல்லட்டும்!

முத்தமிழ் அழகி


உன் கயல் விழி பேசும் மொழிக்கு முன்னால்
இயல் தமிழும் என்ன செய்யும்
உன் கொலுசின் சிணுங்கலுக்கு முன்னால்
இசைத் தமிழும் இல்லாமல் போனதடி!
உன் நடை என்னும் நாடகம் கண்டு
நாடகத் தமிழும் நாணம் கொண்டதடி
உன்னால் இன்று முத்தமிழுக்கும் கர்வபங்கம்!

தேவதையிடம் கேட்ட வரம்


தேவதையே உன்னை கணப் பொழுதும் பிரியாத வரம் ஒன்று வேண்டும்!
தேவதையே அதை நீயே தருவாய்!
உன் இமையோடு மையாக வேண்டும்!
உன் இடை தொடும் உடையாக வாழ்ந்திட வேண்டும்!
உன் நெற்றி சுருளும் முடியாக வேண்டும்!
உன் கால் சிணுங்கும் கொலுசாக வேண்டும்!
உன் கண்ணம் தொடும் நீராக வேண்டும்!
முதுமையிலும் உன் விரல் பற்றி நடந்திட வேண்டும்!
மரணம் நேர்ந்தாலும் உன் மடி மீது வேண்டும் !!!!

நேரம்


காலத்தையும் உன் கண்ணோடு கலந்துவிட்டேனடி!
இனி நேரமும் உன் கண்ணின் மணி கொண்டு மட்டுமே!

நீ பிறந்த பின்னே இந்தப் புவி அழகு
நீ நடந்த பின்னே இந்தப் பாதையும் அழகு!
நீ சூடிய பின்னே பூவும் அழகு
உன்னோடு வாழ்ந்த பின்னே தான் என் வாழ்வும் அழகு!

வேல் கொண்டு நடை பழகிய இனம் எங்கள் தமிழ் இனம்!
புரவி கொண்டு களிறு கொன்று போர் புரிந்த இனம்!
விழுப்புண் கொண்டே வீரத்தை அளக்கும் எங்கள் இனம் ஐயா!
வேங்கையை முறம் கொண்டு விரட்டிய இனம் எங்கள் தமிழ் இனம்
மார் தட்டிய காலமெல்லாம் ஏட்டோடு , இன்று
லஞ்சத்தை கண்டு குருடனாய் , ஊழலை கண்டு செவிடனாய்
மரித்தாலும் மானமோடு வீரவேல் என்று கர்ஜித்த தமிழனும் இன்று தொலைக்காட்சிக்கு முன்னே தூங்கும் துயரமும் இங்கே!

Wednesday, July 23, 2008


உன் விழியின் வலிமை கொண்டு
வல்லினம் கற்பித்தாய்!
உன் பூவிதழ் மென்மை கொண்டு
மெல்லினமும் கற்பித்தாய்!
பெண்ணே உன் இல்லாத இடை கொண்டு
இடையினம் எப்படி கற்பிப்பாய்?

வளைவுகள் ஜாக்கிரதை


வளைவுகள் ஜாக்கிரதை
மலைப் பாதையென அவள்!

அன்னை


துன்பம் வரும் வேளை எல்லாம் என் துயரம் தீர்க்க மீண்டும் ஒரு முறை
என்னைக் கருவறைக்குள் சுமப்பவள்!

Tuesday, July 22, 2008

புதுமைப் பெண்


வரதட்சணை டாலர்களில் மற்றும்
பாரதியின் புதுமைப் பெண்!

Monday, July 21, 2008

என் தோழிக்கு !!!


இது தான் காதல் என்று எடுத்துக் கூறவும் இயலவில்லை
இவை தான் என்று பிரித்துப் பார்க்கவும் புரியாதவன்
பெண்ணே என்னிடம் ஏனடி காதலும் கொண்டாய்
கல் நெஞ்சுகாரன் , காயம் செய்தேன் உன் மனதை
உனக்கென்ன பெண்ணே அழுது விட்டாய் ,
ஆண் மகன் என்ற ஆணவம் அடக்கிக் கொண்டேன்
சரி என்றோ பிழை என்றோ எடுத்துக் கூறவும் ஆள் இல்லை
இன்று மனவேதனையுடன் மணவறையில் நீ
விடை தெரியா வினாக்களுடன் பிணவறை வரை நான் !!!!

காற்றென பறக்கும் காட்டுக் குதிரையடி நான்!
உன் கார்குழல் கொண்டு கையகப் படுத்த நினைப்பதும் சரியோ ?
வைகிங் வீரன் எனப் பாயும் பாய்மரம் நானடி!
உன் பனிப் பார்வை கொண்டு கவிழ்ப்பதும் முறையோ ?
உன் விழிச் சுழலில் காதல் வலை விரித்ததும் போதும் பெண்ணே
காதல் என்னும் குண்டு சட்டியில் ஓடும் குதிரை அல்ல
காற்றெனவே உன் காதலும் கரையும்!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றான் அய்யன் அன்று!
எதற்கும் உண்டு தாழ் இன்று , பணம் என்னும் தாள் வடிவில்!

Tuesday, July 15, 2008


இந்தியன் என்பதில் மட்டும் இல்லை ,
நாத்திகன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமை தான்
ஊர் எங்கும் மதக் கலவரம்!

நாளைய தலைமுறை...


நண்பர்கள் இணைய தளத்தில் மட்டும்
நலம் விசாரிப்பு மின்னஞ்சல் வாயிலாக மட்டும்
வந்தாலும் வரவேற்றாலும் தோழி என்கிறான்
கண்டாலும் கேட்டாலும் காதல் என்கிறான்
தந்தைக்கு பிள்ளைப் பாசம் மட்டும் வெப் கேமரா வழியாக
கலாச்சார சீரழிவு என்கின்றனர் முந்தைய சந்ததியினர்
காலத்தின் முன்னேற்றம் என்கின்றான் இவனோ
கலாச்சாரத்தை ஊனமாக்கி விட்டு ஏணியில் ஏறுவது முன்னேற்றமா ?
நாளைய சமூகத்தை வழி நடத்த தவறிவிட்ட குற்றத்துடன்
இன்று குற்றவாளி கூண்டில் என்னைப் போன்ற இளைஞர்கள் , கணினிக்கும் , கனவுக்கும் இடையில்!

உலகமயமாக்குதல் - வெற்றி எய்ட்ஸ் நோய்க்கு மட்டுமே

Friday, July 11, 2008

முதிர் கண்ணி


அறுபதாம் கல்யாணம் ஆதங்கத்துடன் ஆசி பெற வந்தாள் முதிர் கண்ணி

விலைமகள்


இது கரும்பு திண்ண பெறும் கூலியா என்ன
இது இவள் கொடுத்த விலை , மகள் பசி தீர்க்க

கற்றது தமிழ்
விற்பது மாற்றான் மொழி அன்றோ
வறுமையில் தமிழன் மற்றும் அன்று தமிழும் தான்

பொய் சொல்லாதே என்றாள் அன்னை
ஏன் அம்மா என்றேன் வெகுளியாய்
சாமி கண்ணை குத்தி விடும் என்றாள் வாஞ்சையுடன்!
சாமி கண்ணை குத்தியதாக செய்தி இல்லை
ஆயினும் நேர் வழி கொண்டு வாழ்பவர்கள் எல்லாம்
இன்று கண் இருந்தும் குருடனாய்
இந்த பொய்யர்கள் உலகத்தில்!

Thursday, July 10, 2008


25 வயது முடிந்து விட்டது , ஆம் அலெக்சாண்டர் உலகையே புரட்டிப் போட்ட வயது ....சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு ஒரு புறம், ஆனால் அரை சாண் வயிறு என்னை அந்நியனிடம் அடி பணிய வைத்தது , அடி பணிந்தாலும் முதுகெழும்பு இல்லாமல் போய் விட வில்லை. அடகு வைத்தது மூளையை மட்டும் தான், கனவுகளை அல்ல, அது வரை பாரதி கண்டவை கனவுகளாக மட்டும் என்னுள்!


லட்சியத்தின் பாதையில் சில லட்சங்கள்
சறுக்கி விழுந்தேன்