Friday, July 23, 2010

Sunday, July 18, 2010


அரை கால் சட்டை அணியும் வயதில்
அர்த்தமற்ற சண்டை ஆயிரமிட்டாலும்
ஆசையாய் கிடைத்த ஆரஞ்சு மிட்டாய் என்றபோதும்
பாதியாய் கடித்து கை பிடித்து ஊட்டி விட்ட என் மூன்று வயது குட்டி தேவதை !!!

விடலை பருவமதில் நெல்லி மரம் ஏறி கணி திருடும் போதெல்லாம்
பக்கம் நின்று பாவாடை ஏந்தி, பத்திரமாய் என பார்த்து சிரித்தவள்
பக்கம் நின்று பகிர்ந்துண்ட என் பட்டு ரோஜா !!!

பள்ளி பருவமதில் துள்ளிய ஓட்டமும், மருண்ட கண்ணுமாய்
நித்தம் ஒரு முயல் கதை, மயில் கதை என
கை பிடித்தே நடக்கலானோம்
நட்பாய் நட்புனர்த்திய என் பள்ளி தாமரை !!!

கல்லூரி சாலையில் பூக்களும் காத்திருக்கும், வண்ணத்து பூச்சி அவள் வருகைக்காக
வந்து அமர்ந்தது என் முன் இருக்கையில்
கேலி பேச்சும் கிண்டல் பொழுதும் ,
அரை பார்வையும் அவசர தேடலுமாய் தொடர்ந்தது
நூலகத்தின் நிசப்தத்தில் பார்வை பரிமாற்றம் ...
இன்றும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்
கல்லூரி வகுப்பில் கடைசி மேஜையில் ஒன்றாய் கிறுக்கிய பெயரின் மூலம் !!!



மெல்லிய தூறல் கண்டு ஒதுங்கியே நின்றேன் ,
ஒற்றை கொடையில் ஒரு மின்னல், எதிர் வீட்டு தாரகை ...
மழை ஒட்டாமல ஒற்றை கொடையில் ஒட்டியே சென்றோம்
சில்லென்று மழை துளி பட்டு சிலிர்த்ததோ ,
அவள் விரல் பட்டு சிலிர்த்ததோ
மண் வாசமோடு அவள் வாசமும் மனதை வருட
மனம் மாற்றும் முன், இடம் மாற்றம்
மிஞ்சியது பரிசாய் அவள் கொடுத்த கடைசி முத்தமும் வாழ்த்து அட்டையும் !!!

வெண்ணிலவும் முகில் தேடும் நள்ளிரவு நேரம்,
அருமை தோழியுடன் ரயில் பயணம் ,
கண்ணியமாய் கதை பேசி , மௌனமாய் மொழி பேசி
மெல்ல புன்னகைத்தோம் , சிக்கனமாய் சிரித்தோம்
கரைந்த இரவின் இசையில் தோழமை உணர்த்தினாள் !!!

என்னை ஈர்த்த அறிமுகம்கள் பல

--- அன்னை காட்டிய புகைப்படத்தை
ஆர்வமாய் வாங்கி அவசரமாய் பார்க்கையில் ,
வந்து போனார்கள் நினைவில் ...
குட்டி தேவதைகளும் ,மனதை வருடிய தென்றல்களும் !!!








Wednesday, May 5, 2010



சிறு கண் சிமிட்டல்களுக்கு பின்னால் ஒரு காதல் மறைத்தாள்
காதல் கடந்த தருணத்தில் சிறு மோகம் கொண்டாள்
மோகம் முழைத்த காலத்தில் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்
மஞ்சத்தில் ஆடை கலைத்த பொழுதில் வெட்கம் உடுத்தினாள்
வெட்கமும் உடைப்பட்டு போக என்னை ஆடையென சூடினாள்
பின்பு என்னை கலைத்து நாணம் உடுத்தினாள்

Sunday, March 7, 2010


தொடர் வண்டி பயணத்தில் தொலைந்து போனதொரு இரவில்
மழை சாரலின் சிலிர்பாய் அருகாமையில் தேவதையின் வாசம் ,
பரிதவிப்பாய் கடந்த பத்து நிமிடத்தில் நூறு முறை இறந்து பிறந்திருபேன்
தவிப்பாய் தயங்கிய வார்த்தைகளும் உன் இமையின் படபடப்பில் சிதைந்து போனது
உறைந்த வார்த்தையினை சிறை மீட்டி அழகாய் தொடுத்தேன் கவிதையினை , கடிதமாய்
என் மீது இல்லையென்றாலும் , உனக்கென்று ஒரு காதல் வந்த பின் இதை மறுமுறை வாசித்து பார்
ஏனெனில் என் காதல் புரியவில்லையென்றால் இக்கவிதை வெறும் வார்த்தையின் விளம்பரம்
காதலே புரியாதவர்களுக்கு இது வெற்று காகிதத்தில் தீட்டிய கிறுக்கல்கள் .

அம்பெய்த மறந்த தருணம்


அம்பெய்த மறந்த தருணம் போல் , கண்டதும் ஏனோ காதல் வரவில்லை
அழகாய் நட்புக்குள் மறைந்த காதல் இது
உறக்கமில்லா இரவுகளில் உன்னோடு உரையாடிய நாட்களில் கொஞ்சம்
அர்த்தமில்லா அரட்டையின் நடுவில் உன் கண்கள் என்னை தேடியபொழுதில் கொஞ்சம்
செல்லமாய் கோபம் கொண்டு என் தோள் தட்டிய நேரத்தில் கொஞ்சம்
ரகசியமாய் உன் புகைப்படங்களை ரசித்த நாட்களில் கொஞ்சம்
இரவு நேர ரயில் பயணத்தில் கிசுகிசுப்பாய் கதை பேசிய நேரத்தில் -
காது மடல் ஓரம் உன் மூச்சின் தீண்டலில் கொஞ்சம்
நண்பர்கள் அறியாமல் ஊர் சுற்றிய காலங்களில் கொஞ்சம்
உனக்காய் எழுதிய கவிதை கண்டு அழகாய் வெட்கப்பட்ட தருணத்தில் கொஞ்சம்
மழை நாட்களில் இணக்கமாய் நடந்த பொழுதில் கொஞ்சம்
களவாய் அரை புருவம் தூக்கி காதலாய் நீ பார்க்கும் தருணத்தில் கொஞ்சம்
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சம் காதலிப்போம் ,
கொஞ்சி கொஞ்சியே இனி மீதி காதல் செய்வோம் .