Sunday, March 7, 2010


தொடர் வண்டி பயணத்தில் தொலைந்து போனதொரு இரவில்
மழை சாரலின் சிலிர்பாய் அருகாமையில் தேவதையின் வாசம் ,
பரிதவிப்பாய் கடந்த பத்து நிமிடத்தில் நூறு முறை இறந்து பிறந்திருபேன்
தவிப்பாய் தயங்கிய வார்த்தைகளும் உன் இமையின் படபடப்பில் சிதைந்து போனது
உறைந்த வார்த்தையினை சிறை மீட்டி அழகாய் தொடுத்தேன் கவிதையினை , கடிதமாய்
என் மீது இல்லையென்றாலும் , உனக்கென்று ஒரு காதல் வந்த பின் இதை மறுமுறை வாசித்து பார்
ஏனெனில் என் காதல் புரியவில்லையென்றால் இக்கவிதை வெறும் வார்த்தையின் விளம்பரம்
காதலே புரியாதவர்களுக்கு இது வெற்று காகிதத்தில் தீட்டிய கிறுக்கல்கள் .

அம்பெய்த மறந்த தருணம்


அம்பெய்த மறந்த தருணம் போல் , கண்டதும் ஏனோ காதல் வரவில்லை
அழகாய் நட்புக்குள் மறைந்த காதல் இது
உறக்கமில்லா இரவுகளில் உன்னோடு உரையாடிய நாட்களில் கொஞ்சம்
அர்த்தமில்லா அரட்டையின் நடுவில் உன் கண்கள் என்னை தேடியபொழுதில் கொஞ்சம்
செல்லமாய் கோபம் கொண்டு என் தோள் தட்டிய நேரத்தில் கொஞ்சம்
ரகசியமாய் உன் புகைப்படங்களை ரசித்த நாட்களில் கொஞ்சம்
இரவு நேர ரயில் பயணத்தில் கிசுகிசுப்பாய் கதை பேசிய நேரத்தில் -
காது மடல் ஓரம் உன் மூச்சின் தீண்டலில் கொஞ்சம்
நண்பர்கள் அறியாமல் ஊர் சுற்றிய காலங்களில் கொஞ்சம்
உனக்காய் எழுதிய கவிதை கண்டு அழகாய் வெட்கப்பட்ட தருணத்தில் கொஞ்சம்
மழை நாட்களில் இணக்கமாய் நடந்த பொழுதில் கொஞ்சம்
களவாய் அரை புருவம் தூக்கி காதலாய் நீ பார்க்கும் தருணத்தில் கொஞ்சம்
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சம் காதலிப்போம் ,
கொஞ்சி கொஞ்சியே இனி மீதி காதல் செய்வோம் .