Tuesday, December 16, 2008

கவிதை சொல்லிய கதை !!!


ஆம் என் காதலும் கண்களில் தான் ஆரம்பமானது ...
ஜன்னல் ஓர பயணம் , அதில் சில்லென்ற தென்றலாய் அவள் முகம்
நாணமென்னும் நூல் தொடுத்து ஏய்தாள் கள்ள பார்வை
மீண்டும் அதே ஜன்னலோரம் , காத்திருந்தேன் அழுக்கு சட்டைக்கு பதில் அழகான சட்டையுடன்
அதே பார்வை , பரிட்சையத்தின் பரிசாய் சிறு புன்னகையும் சேர்ந்தது
பார்வை மின்சாரம் என்றால் , அரை புன்னகையோ ஆள் கொள்ளும் பூகம்பம்
பார்வையும் புண்ணகையும் சில நாள் தொடர ,hello என்றேன் ஒரு நாள்
பதிலாய் வெட்கம் தின்ற அரை வார்த்தை , ஆராய்ந்து பார்த்தால் hai என்றாள்
அரை வார்த்தையும் ஆயிரம் வார்த்தை ஆனது தேநீர் சந்திப்பில்
தற்செயலாய் சில நேரமும் , தன் செயளாய் பல நேரமும் மெல்ல உறசினோம்

நாணமாய் சிவக்கும் உன் முகமும் ஆயிரம் கதை கூறும்
விரல் பற்றியே நடக்கலானோம் , கை பற்றியே கடற்கரையும் அளந்தோம்
சின்ன சின்ன சில்மிசமும் ,ஒரு நொடி முத்தமும் என் உயிர் எங்கும் கலந்தது
இதுவே சுவர்கம் என்று நினைத்தேன்
ஆம் என் காதலும் திருமணத்தில் தான் முடிந்தது ...

மீண்டும் ஜன்னல் வழியே என் பார்வை ,மணவறையில் நீ யாருடனோ
தந்தை பாசம் என்றாய் , தாய் சொல் என்றாய் , சூழ்நிலை கைதி என்றாய்
உன்னை கைதி என்று சொல்லி என்னை தனிமை சிறையில் தள்ளி விட்டாய்
கடற்கரையில் உன் காலடி தேடும் பைத்தியக்காரனும் ஆனேன்
உறக்கம் இல்லா இரவுகளும் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
ஆண்டுகள் சில உருண்டன , அகவையும் அதிகரித்து
பிள்ளை பாசம் , பேரன் ஆசை , நலம் கருதிய நண்பர்கள் நச்சரிப்பு
கலியாண ஏற்பாடும் தீவிரமானது ,மணம் முடிப்பதற்கு முன்
கடைசியாய் ஒரு முறை அவளை சந்திப்பது என்னும் விபரதீமான முடிவு
அரை மனதாய் அழுத்தினேன் அழைப்பு மணியை
அதே முகம் , சில்மிச பார்வையும் இன்று வினா பார்வை ஆனது
சின்ன சிரிப்பும் அவள் முகத்தில் மெல்ல உலர்ந்து தான் போனது

என் இருதயமும் வேகமாய் உறைந்து தான் போனது
பரிட்சையத்தின் அடையாளமும் இல்லாமல் வரவேற்றாள் மரியாதை நிமித்தமாக
மறந்து தான் போனாள் போல் , நிலை குலைந்து தான் போனேன் நானும் ,
ஏதேதோ சொல்ல துடித்தவள் மௌனமாய் நின்றாள்
நிற்க பிடிக்காமல் புறப்பட எத்தனிதேன்
மெள்ள பேசியது , நான் பரிசாய் தந்த அவள் கால் கொழுசு
மௌனத்தின் இடையே அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர்
என் இதயமும் மெள்ள விக்கித்து தான் போனது

நெஞ்சினில் காதலையும் , கண்ணில் கணவுகளையும் புதைத்து வாழும் ஆயிர கணக்கான இந்திய பெண்களில் முகவரியும் ஆனாய் , முதல் வரியும் ஆனாய் .
நானும் அந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையாக விரும்பவில்லை
மனதில் உன்னை காதலித்து , மற்றொரு வாழ்கையும் விரும்பவில்லை
நீ இல்லாத காதலையும் கனவுகளாய் மாற்றி காதலித்தேன்
அர்த்தம் அறியா சந்தோஷம் , ஆயினும் சிறு கண்ணீரும் வந்தது
ஆம் என் காதலும் கண்ணீரில் தான் முடிந்தது ...

2 comments:

Sendhilkumar said...

Azhuthamaana kadhai-yinai nayamaakiyadhu un kavidhai!

Unknown said...

Excellent Write up.
Brought tears in my eyes.
I dont know why.