
பள்ளி தாமரையே, பளிங்கு தேவதையே
பட்டாம்பூச்சி என சிறகடித்து பள்ளி பருவமதில்
குட்டி கணவுகளை தந்தாய்
உன் சின்ன சிரிப்பில் சிறகுகள் தந்து சிலிர்ப்பூட்டினாய்
மெல்ல பேசியே சிறு மயக்கம் தந்தாய்
உன் அகன்ற விழியினில் ஆயிரம் கதைகளும் சொன்னாய்
இரட்டை சடை கொண்டு ஒற்றை இதயமும் பறித்தாய்
குட்டி தீவே,குட்டை பாவடையில் நீயும் வலம் வர
எனக்குள் சின்ன சின்ன சிகரங்கள்
மலர்கள் வேண்டுமெனில் மொட்டுகளில் அழகாக இருக்கலாம்
பருவமென்னும் இதழ் விரித்தாலும் உன் பட்டு கன்னத்தின் அழகு மட்டும் குறைவதில்லை
இளம்பிறை என இளவயதில் கழித்தோம் முழு மதியென மலர்ந்த பின் மட்டும் நாணம் ஏனோ முகம் காட்ட மறுப்பதும் ஏனோ
தோழியே, வெகுளியாய் வினாக்கள் கேட்காதே,
சொல்லி விளங்குவது இல்லை உணர்வுகளும், நினைவுகளும்
நீ விட்டு சென்றாலும் உன் நினைவுகள் மட்டும் என்னை விட்டு விலகுவதுமில்லை
மழை நின்ற பின்னால் மரம் சிந்தும் ஒரு துளியும் அழகு தான், அது போல்
உன் நினைவுகள் என்னுள் அழகாய் ....
No comments:
Post a Comment