Friday, July 23, 2010

Sunday, July 18, 2010


அரை கால் சட்டை அணியும் வயதில்
அர்த்தமற்ற சண்டை ஆயிரமிட்டாலும்
ஆசையாய் கிடைத்த ஆரஞ்சு மிட்டாய் என்றபோதும்
பாதியாய் கடித்து கை பிடித்து ஊட்டி விட்ட என் மூன்று வயது குட்டி தேவதை !!!

விடலை பருவமதில் நெல்லி மரம் ஏறி கணி திருடும் போதெல்லாம்
பக்கம் நின்று பாவாடை ஏந்தி, பத்திரமாய் என பார்த்து சிரித்தவள்
பக்கம் நின்று பகிர்ந்துண்ட என் பட்டு ரோஜா !!!

பள்ளி பருவமதில் துள்ளிய ஓட்டமும், மருண்ட கண்ணுமாய்
நித்தம் ஒரு முயல் கதை, மயில் கதை என
கை பிடித்தே நடக்கலானோம்
நட்பாய் நட்புனர்த்திய என் பள்ளி தாமரை !!!

கல்லூரி சாலையில் பூக்களும் காத்திருக்கும், வண்ணத்து பூச்சி அவள் வருகைக்காக
வந்து அமர்ந்தது என் முன் இருக்கையில்
கேலி பேச்சும் கிண்டல் பொழுதும் ,
அரை பார்வையும் அவசர தேடலுமாய் தொடர்ந்தது
நூலகத்தின் நிசப்தத்தில் பார்வை பரிமாற்றம் ...
இன்றும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்
கல்லூரி வகுப்பில் கடைசி மேஜையில் ஒன்றாய் கிறுக்கிய பெயரின் மூலம் !!!



மெல்லிய தூறல் கண்டு ஒதுங்கியே நின்றேன் ,
ஒற்றை கொடையில் ஒரு மின்னல், எதிர் வீட்டு தாரகை ...
மழை ஒட்டாமல ஒற்றை கொடையில் ஒட்டியே சென்றோம்
சில்லென்று மழை துளி பட்டு சிலிர்த்ததோ ,
அவள் விரல் பட்டு சிலிர்த்ததோ
மண் வாசமோடு அவள் வாசமும் மனதை வருட
மனம் மாற்றும் முன், இடம் மாற்றம்
மிஞ்சியது பரிசாய் அவள் கொடுத்த கடைசி முத்தமும் வாழ்த்து அட்டையும் !!!

வெண்ணிலவும் முகில் தேடும் நள்ளிரவு நேரம்,
அருமை தோழியுடன் ரயில் பயணம் ,
கண்ணியமாய் கதை பேசி , மௌனமாய் மொழி பேசி
மெல்ல புன்னகைத்தோம் , சிக்கனமாய் சிரித்தோம்
கரைந்த இரவின் இசையில் தோழமை உணர்த்தினாள் !!!

என்னை ஈர்த்த அறிமுகம்கள் பல

--- அன்னை காட்டிய புகைப்படத்தை
ஆர்வமாய் வாங்கி அவசரமாய் பார்க்கையில் ,
வந்து போனார்கள் நினைவில் ...
குட்டி தேவதைகளும் ,மனதை வருடிய தென்றல்களும் !!!








Wednesday, May 5, 2010



சிறு கண் சிமிட்டல்களுக்கு பின்னால் ஒரு காதல் மறைத்தாள்
காதல் கடந்த தருணத்தில் சிறு மோகம் கொண்டாள்
மோகம் முழைத்த காலத்தில் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்
மஞ்சத்தில் ஆடை கலைத்த பொழுதில் வெட்கம் உடுத்தினாள்
வெட்கமும் உடைப்பட்டு போக என்னை ஆடையென சூடினாள்
பின்பு என்னை கலைத்து நாணம் உடுத்தினாள்

Sunday, March 7, 2010


தொடர் வண்டி பயணத்தில் தொலைந்து போனதொரு இரவில்
மழை சாரலின் சிலிர்பாய் அருகாமையில் தேவதையின் வாசம் ,
பரிதவிப்பாய் கடந்த பத்து நிமிடத்தில் நூறு முறை இறந்து பிறந்திருபேன்
தவிப்பாய் தயங்கிய வார்த்தைகளும் உன் இமையின் படபடப்பில் சிதைந்து போனது
உறைந்த வார்த்தையினை சிறை மீட்டி அழகாய் தொடுத்தேன் கவிதையினை , கடிதமாய்
என் மீது இல்லையென்றாலும் , உனக்கென்று ஒரு காதல் வந்த பின் இதை மறுமுறை வாசித்து பார்
ஏனெனில் என் காதல் புரியவில்லையென்றால் இக்கவிதை வெறும் வார்த்தையின் விளம்பரம்
காதலே புரியாதவர்களுக்கு இது வெற்று காகிதத்தில் தீட்டிய கிறுக்கல்கள் .

அம்பெய்த மறந்த தருணம்


அம்பெய்த மறந்த தருணம் போல் , கண்டதும் ஏனோ காதல் வரவில்லை
அழகாய் நட்புக்குள் மறைந்த காதல் இது
உறக்கமில்லா இரவுகளில் உன்னோடு உரையாடிய நாட்களில் கொஞ்சம்
அர்த்தமில்லா அரட்டையின் நடுவில் உன் கண்கள் என்னை தேடியபொழுதில் கொஞ்சம்
செல்லமாய் கோபம் கொண்டு என் தோள் தட்டிய நேரத்தில் கொஞ்சம்
ரகசியமாய் உன் புகைப்படங்களை ரசித்த நாட்களில் கொஞ்சம்
இரவு நேர ரயில் பயணத்தில் கிசுகிசுப்பாய் கதை பேசிய நேரத்தில் -
காது மடல் ஓரம் உன் மூச்சின் தீண்டலில் கொஞ்சம்
நண்பர்கள் அறியாமல் ஊர் சுற்றிய காலங்களில் கொஞ்சம்
உனக்காய் எழுதிய கவிதை கண்டு அழகாய் வெட்கப்பட்ட தருணத்தில் கொஞ்சம்
மழை நாட்களில் இணக்கமாய் நடந்த பொழுதில் கொஞ்சம்
களவாய் அரை புருவம் தூக்கி காதலாய் நீ பார்க்கும் தருணத்தில் கொஞ்சம்
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சம் காதலிப்போம் ,
கொஞ்சி கொஞ்சியே இனி மீதி காதல் செய்வோம் .

Friday, October 9, 2009

முதல் இரவு

முதல் இரவு - மை பூசிய இந்த மங்கையின் கண்ணுக்குள்ளும் சிறு கனவுண்டு !
இந்த பேதையின் ழ் மனதிலும் பல ஆசையுண்டு !!
கணவுகளை தாங்கிய மனம் படர்ந்து நிற்க ,
பெண்ணென வளர்ந்த மனம் தவிப்பாய் தயங்கி நிற்க
அறிந்தவனாய் உன் இரு கரங்களில் என் கை கோர்த்து
தோழனென தோள் கொடுத்து , காது மடல் ஓரம் மெல்ல காதல் மொழி பேசினாய் !
அனைத்து அனைத்து மெல்ல அரவணைத்தே என் அச்சம் நீக்கினாய் !
விரல் தீண்டலில் என் வெட்கம் உடைத்தாய் !
மையல் முத்தத்தில் உயிர் உறைய செய்து , உஷ்ண முத்தத்தில் உயிர்தெழ செய்தாய் !
மூச்சு காற்றில் மெய்யுருக செய்து , மீசை ரோமத்தில் விழித்தெழ செய்தாய் !
உன் மெய் தீண்டலில் என் பெண்மையை உணரசெய்தாய்! ஆண்மகனே!!
மஞ்சத்தில் என்னை மலர செய்து , இந்த பெண்ணுக்குள் புது இன்பம் உணர செய்தாய் !
கன்னியின் கற்பனைகளை காட்சியாய் உயிர்பெயர்த்து
கனவுகளை கவிதையாய் மொழிபெயர்த்த என்னவனே ! உனக்காய்
முற்றுப்புள்ளி இல்லா ஒரு முத்தம் !!!
- Chiyaan

Tuesday, September 22, 2009

கானல் கனவு !!!



சலனமற்று கிடந்த கைபேசியை நொடிக்கொரு தரம் உற்று நோக்கினேன்
செல்லமாய் கைபேசி சினுங்கியபோதெல்லாம் உன்னினைவாய் சினுங்குவதாய்
எட்டி பிடித்து ஏமாந்தேன் ...

காற்றில் கதவசைந்தாலும் வந்தது நீயென வாசல்வரை வந்து சென்றேன்
விக்கித்து நின்றாலும் நீரின்றி வீன்பிடிவாதம் செய்தேன்
நினைப்பது நீயென்றால் அதைநீடிக்கும் நப்பாசையில் ...

உன்பெயர் யார் உட்சரித்தாலும் ரகசியமாய் சிரித்தேன்
உறக்கமில்லா இரவுகளில் உன்னுடன் உறவாடிய நிமிடங்களை
உறையவைத்து ரசித்தேன் ...

தோழியே! உன்னால் நேர்ந்த தவிப்புகள் போதும்
பெண்ணே மறுமுறை ஓர் உண்மை சொல் உனக்கும் இப்படி தான் நேர்ந்தது என்று
அப்போது தகிப்புகளும் சுகமாகும் ...

Thursday, June 18, 2009


நரை கூடி கிழபருவமெய்தி மரணம் என்னும் நிம்மதி நோக்கி அரை நித்திரையில் நான் , நிழலாய் ஓர் உருவம் உன் சாயலில் என் ஜன்னல் கடந்து செல்ல
ஆர்வத்தில் ஆசையாய் ஒட்டிய அரை புன்னகையும் நிழல் நோக்கியே ...
ஒட்டிய புன்னகை உறையும் முன் , இதயமும் உறைந்து போனது முடிவாய் உன் பெயர் சொல்லி ...
காலம் காயத்தை மாற்றும், காதலை மாற்றுமா ? என் முதல் காதல் !!!!

Tuesday, December 16, 2008

கவிதை சொல்லிய கதை !!!


ஆம் என் காதலும் கண்களில் தான் ஆரம்பமானது ...
ஜன்னல் ஓர பயணம் , அதில் சில்லென்ற தென்றலாய் அவள் முகம்
நாணமென்னும் நூல் தொடுத்து ஏய்தாள் கள்ள பார்வை
மீண்டும் அதே ஜன்னலோரம் , காத்திருந்தேன் அழுக்கு சட்டைக்கு பதில் அழகான சட்டையுடன்
அதே பார்வை , பரிட்சையத்தின் பரிசாய் சிறு புன்னகையும் சேர்ந்தது
பார்வை மின்சாரம் என்றால் , அரை புன்னகையோ ஆள் கொள்ளும் பூகம்பம்
பார்வையும் புண்ணகையும் சில நாள் தொடர ,hello என்றேன் ஒரு நாள்
பதிலாய் வெட்கம் தின்ற அரை வார்த்தை , ஆராய்ந்து பார்த்தால் hai என்றாள்
அரை வார்த்தையும் ஆயிரம் வார்த்தை ஆனது தேநீர் சந்திப்பில்
தற்செயலாய் சில நேரமும் , தன் செயளாய் பல நேரமும் மெல்ல உறசினோம்

நாணமாய் சிவக்கும் உன் முகமும் ஆயிரம் கதை கூறும்
விரல் பற்றியே நடக்கலானோம் , கை பற்றியே கடற்கரையும் அளந்தோம்
சின்ன சின்ன சில்மிசமும் ,ஒரு நொடி முத்தமும் என் உயிர் எங்கும் கலந்தது
இதுவே சுவர்கம் என்று நினைத்தேன்
ஆம் என் காதலும் திருமணத்தில் தான் முடிந்தது ...

மீண்டும் ஜன்னல் வழியே என் பார்வை ,மணவறையில் நீ யாருடனோ
தந்தை பாசம் என்றாய் , தாய் சொல் என்றாய் , சூழ்நிலை கைதி என்றாய்
உன்னை கைதி என்று சொல்லி என்னை தனிமை சிறையில் தள்ளி விட்டாய்
கடற்கரையில் உன் காலடி தேடும் பைத்தியக்காரனும் ஆனேன்
உறக்கம் இல்லா இரவுகளும் கவிதையாய் மொழி பெயர்த்தேன்
ஆண்டுகள் சில உருண்டன , அகவையும் அதிகரித்து
பிள்ளை பாசம் , பேரன் ஆசை , நலம் கருதிய நண்பர்கள் நச்சரிப்பு
கலியாண ஏற்பாடும் தீவிரமானது ,மணம் முடிப்பதற்கு முன்
கடைசியாய் ஒரு முறை அவளை சந்திப்பது என்னும் விபரதீமான முடிவு
அரை மனதாய் அழுத்தினேன் அழைப்பு மணியை
அதே முகம் , சில்மிச பார்வையும் இன்று வினா பார்வை ஆனது
சின்ன சிரிப்பும் அவள் முகத்தில் மெல்ல உலர்ந்து தான் போனது

என் இருதயமும் வேகமாய் உறைந்து தான் போனது
பரிட்சையத்தின் அடையாளமும் இல்லாமல் வரவேற்றாள் மரியாதை நிமித்தமாக
மறந்து தான் போனாள் போல் , நிலை குலைந்து தான் போனேன் நானும் ,
ஏதேதோ சொல்ல துடித்தவள் மௌனமாய் நின்றாள்
நிற்க பிடிக்காமல் புறப்பட எத்தனிதேன்
மெள்ள பேசியது , நான் பரிசாய் தந்த அவள் கால் கொழுசு
மௌனத்தின் இடையே அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர்
என் இதயமும் மெள்ள விக்கித்து தான் போனது

நெஞ்சினில் காதலையும் , கண்ணில் கணவுகளையும் புதைத்து வாழும் ஆயிர கணக்கான இந்திய பெண்களில் முகவரியும் ஆனாய் , முதல் வரியும் ஆனாய் .
நானும் அந்த வாக்கியத்தில் ஒரு வார்த்தையாக விரும்பவில்லை
மனதில் உன்னை காதலித்து , மற்றொரு வாழ்கையும் விரும்பவில்லை
நீ இல்லாத காதலையும் கனவுகளாய் மாற்றி காதலித்தேன்
அர்த்தம் அறியா சந்தோஷம் , ஆயினும் சிறு கண்ணீரும் வந்தது
ஆம் என் காதலும் கண்ணீரில் தான் முடிந்தது ...

Friday, December 12, 2008


தென்றளுக்கு உன்னிடம் ஏனடி விளையாட்டு -
மலர் கொய்து விளையாடி அலுத்து மங்கை உன்னிடம் மன்றாடி பார்கிறதோ
மண்ணித்து அனுப்பு இம்முறை
தென்றலுக்கும் இடம் இல்லை இனி , நான் தீண்டும் தேகத்தில்