Sunday, March 7, 2010

அம்பெய்த மறந்த தருணம்


அம்பெய்த மறந்த தருணம் போல் , கண்டதும் ஏனோ காதல் வரவில்லை
அழகாய் நட்புக்குள் மறைந்த காதல் இது
உறக்கமில்லா இரவுகளில் உன்னோடு உரையாடிய நாட்களில் கொஞ்சம்
அர்த்தமில்லா அரட்டையின் நடுவில் உன் கண்கள் என்னை தேடியபொழுதில் கொஞ்சம்
செல்லமாய் கோபம் கொண்டு என் தோள் தட்டிய நேரத்தில் கொஞ்சம்
ரகசியமாய் உன் புகைப்படங்களை ரசித்த நாட்களில் கொஞ்சம்
இரவு நேர ரயில் பயணத்தில் கிசுகிசுப்பாய் கதை பேசிய நேரத்தில் -
காது மடல் ஓரம் உன் மூச்சின் தீண்டலில் கொஞ்சம்
நண்பர்கள் அறியாமல் ஊர் சுற்றிய காலங்களில் கொஞ்சம்
உனக்காய் எழுதிய கவிதை கண்டு அழகாய் வெட்கப்பட்ட தருணத்தில் கொஞ்சம்
மழை நாட்களில் இணக்கமாய் நடந்த பொழுதில் கொஞ்சம்
களவாய் அரை புருவம் தூக்கி காதலாய் நீ பார்க்கும் தருணத்தில் கொஞ்சம்
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சம் காதலிப்போம் ,
கொஞ்சி கொஞ்சியே இனி மீதி காதல் செய்வோம் .

No comments: